பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

திங்கள், 13 ஏப்ரல், 2009

ஈழத் தமிழர்க்கு, வெள்ளைக்கார தேசத்திடம் கேட்பதற்கு உரிமை இருக்கின்றதா???மகாத்மா காந்தியின் அன்றைய சத்தியாக்கிரக போராட்டங்களுக்கு மதிப்பளித்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது வெள்ளைக்கார தேசம். ஆனால் இன்று... ஈழ மக்களின் தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் தலைசாய்த்து தமிழர்களின் நியாயமான சுதந்திரத்துக்கான கோரிக்கைகளுக்கு வழிவகுக்கமட்டும் ஏன் பின்னடிக்கின்றன???
ஈழமக்கள் தமது சுதந்திரத்தினை இழந்ததற்கு இந்த வெள்ளைக்கார தேசம் [முக்கியமாக பிரித்தானியா] அன்றிழைத்த தவறுகள்தான் மூலகாரணம். ஈழமக்களின் பிரச்சினையினை தீர்த்து வைக்கவேண்டிய கடப்பாடு கட்டாயம் அவர்களுக்கு உண்டு. அவர்களால் பறிபோன நமது உரிமையையே நாம் கேட்கின்றோம்.
நாம் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது இதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியம்.
-பருத்தியன்-

1 கருத்து:

தமிழன்-கறுப்பி... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.