பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

திங்கள், 11 மே, 2009

தமிழக மாணவர்களே!அவலப்படும் ஈழ மக்கள் உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோளை விடுக்கின்றார்கள்


மாணவர்களே!

யாரிடமும் இல்லாத பலம் உங்களிடம் இருக்கின்றது. உங்கள் தேசத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வல்லமை உங்களிடம் மட்டுமே இருக்கின்றது. ஏனெனில், பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாணவராவது இருப்பீர்கள்.நீங்கள் மனது வைத்தால் உங்கள் குடும்பத்தின் வாக்குகள் அவலப்பட்டு அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றும்.கருணையுள்ளம் கொண்டு உங்கள் வேண்டுதல்களை உங்கள் குடும்பத்தினரிடம் முன்வையுங்கள். உங்களால் முடிந்தவரைக்கும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் எடுத்துரையுங்கள்.

ஈழத் தமிழினத்தினை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு துணைநிற்கும் காங்கிரஸ் கூட்டணிக்கு உங்கள் வீட்டு ஓட்டுக்கள் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெற்றோரை இழந்து , அனைத்தையும் இழந்து வாழ்வினைத் தொலைத்து நிற்கும் உங்களைப் போன்ற ஈழக்குழந்தைகளை ஒருகணம் நினைந்து இந்த காருண்யம் மிக்க காரியத்தினை செய்யுங்கள் தமிழக மாணவர்களே!

காலம் தாழ்த்த காலம் இல்லை. இப்பொழுதே புறப்படுங்கள்!!!

எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்...
ஈழத் தமிழர்கள்

கருத்துகள் இல்லை: